கரந்தெனிய மற்றும் காலி ஆகிய இடங்கள் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோன தொற்றின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் 07 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து கரந்தெனிய பகுதியில் வசிப்பவர்களுக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸை கண்டறியும் பி.சி.ஆர் சோதனை முடிவுகள் கிடைக்கும் வரை சில பகுதிகளை தற்காலிகமாக தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டது என்றும் ஆளுநர் வில்லி கமகே குறிப்பிட்டுள்ளார்.