நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட வர்த்தமானியையும், எதிர்வரும் ஜுன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானியையும் வலுவிழக்க செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
ஐந்து நீதியரசர்கள் கொண்ட ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் சம்பந்தமான சமர்ப்பணங்கள் கடந்த 10 அமர்வுகளில் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் மனுக்கள் மீதான பூர்வாங்க விசாரணைகள் நேற்று மாலை ஐந்து மணியுடன் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த மனுக்களை தொடர்ந்தும் விசாரிப்பதா இல்லையா என்பதை அறிவிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இதன்படி இந்த மனுக்கள் அனைத்தும் இன்று இரத்து செய்யப்பட்டன.