Rat fever early symptoms causes and prevention- தேங்கிய மழைநீரில் நடப்பதன் மூலம் எலி காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் நோய்த்தொற்று ஏற்படலாம்.

லெப்டோஸ்பைரோசிஸ் என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்று நோயாகும். இது எலி, நாய், பன்றி உள்ளிட்ட விலங்குகளின் சிறுநீர் மூலம் பரவுகிறது.

இந்த விலங்குகளின் சிறுநீர் கலந்த மழைநீர் அல்லது வெள்ளநீரில் நடக்கும்போது, கால்களில் உள்ள காயங்கள் மற்றும் சிறிய கீறல்கள் வழியாக பாக்டீரியா உடலுக்குள் நுழையலாம்.

இதன் பின் கண்கள், மூக்கு மற்றும் வாய் வழியாகவும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

 

அதன் அறிகுறிகள் 

எலி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, வாந்தி மற்றும் குமட்டல், குளிர் மற்றும் நடுக்கம், வயிற்றுப்போக்கு போன்ற சில அறிகுறிகள் ஏற்படும்.

இந்த அறிகுறிகள் டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்புகளிலும் ஏற்படும் என்பதால், அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

சிகிச்சை முறைகள்

எலி காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறாமல் விட்டால் நோய் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

இதனால், சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் செயலிழப்பு, நுரையீரலில் ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல் தொடர்பான பிரச்சனைகள், ரத்த அழுத்தம் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

எலி காய்ச்சல் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.  

மழைக்காலத்தில் பரவும் எலி காய்ச்சல்.., அதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன? | Rat Fever Early Symptoms Causes And Prevention

தடுப்பது எப்படி?

தேங்கிய மழைநீர் மற்றும் வெள்ளநீரில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க முடியாத சூழலில் பாதுகாப்பான காலணிகளை அணிய வேண்டும்.

கால்களில் காயங்கள் இருந்தால், அவற்றில் அசுத்தமான நீர் படாமல் பாதுகாக்க வேண்டும்.

மழைநீர் அல்லது சேற்றுடன் தொடர்பு ஏற்பட்டால் சுத்தமான நீர் மற்றும் சோப்பைப் பயன்படுத்தி உடலை நன்கு கழுவ வேண்டும்.

வெளியே சென்று வந்த பிறகு சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.