அஞ்சலி
மிகவும் போல்டான கதைகளை தேர்வு செய்து நடித்து தன்னை நிரூபித்தவர் தான் நடிகை அஞ்சலி.
கற்றது தமிழ், அங்காடித் தெரு போன்ற படங்களில் நடிகையின் அஞ்சலியின் சிறந்த நடிப்பை காணலாம். திருமண வயது வந்தும் இன்னும் சிங்கிளாகவே இருக்கும் நடிகை அஞ்சலியிடம் திருமணம் பற்றி எல்லா பேட்டிகளில் கேட்கப்படுகிறார்.
அண்மையில் சில பத்திரிக்கையாளர்கள் திருமணம் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அவர், அது என் கல்யாணம், நான் பண்ணிப்பேன். மத்தவங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறைன்னு புரியல"னு தன்னோட ஸ்டைல்ல நச்சென்று பதில் சொல்லியிருக்காங்க.
கல்யாணம்ங்கிறது ஒரு நாள் கொண்டாட்டம் கிடையாதுன்னு அஞ்சலி ஜாலியா கலாய்ச்சிருக்காங்க.
