ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைியில் கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்களானது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியான தாக்கத்தை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில், அசுரர்களின் குருவாகக் கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பின் காரணியாக விளங்குகிறார்.

சுக்கிரனின் நட்சத்திர மாற்றம்: செப்டம்பர் 11 முதல் இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! | Venus Transit In Swati Nakshatra Who Get Huge Luck

ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான இவர்,  செப்டம்பர் 11ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். அங்கு அக்டோபர் 24ஆம் தேதி வரை சஞ்சரித்த பின்னர் சித்திரை நட்சத்திரத்திற்குள் செல்கிறார்.

இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் அனைத்து ராசிக்கு குறிப்பிடத்தக்க சாதக , பாதக தாக்கம் காணப்பட்டாலும் , குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கவுள்ளன.

குறிப்பாக, வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுக்கிரனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ரிஷபம்

சுக்கிரனின் நட்சத்திர மாற்றம்: செப்டம்பர் 11 முதல் இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! | Venus Transit In Swati Nakshatra Who Get Huge Luck

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான முழுப் பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைறவடையும்.

நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, பல வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்பட்டு, சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

மிதுனம்

சுக்கிரனின் நட்சத்திர மாற்றம்: செப்டம்பர் 11 முதல் இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! | Venus Transit In Swati Nakshatra Who Get Huge Luck

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். திடீர் நிதி ஆதாயங்களும், முதலீடுகளில் நல்ல லாபமும் கிடைக்கும்.

திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். தடைபட்ட திட்டங்கள் வெற்றிகரமாக முடியும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.புதிய தொழில் தொடங்கவும் இக்காலம் உகந்தது.

துலாம்

சுக்கிரனின் நட்சத்திர மாற்றம்: செப்டம்பர் 11 முதல் இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! | Venus Transit In Swati Nakshatra Who Get Huge Luck

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முதலீடுகளில் நல்ல லாபம் கிடைப்பதுடன், கடன் தொல்லைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.

கலை, ஊடகம், ஃபேஷன் துறையினர் பெரிய வெற்றியைக் காண்பார்கள். தொழிலதிபர்களுக்கு லாபம் தரும் புதிய திட்டங்கள் கிடைக்கும்.வாழ்க்கைத்துணையுடனான உறவும் வலுவடையும்.

கும்பம்

சுக்கிரனின் நட்சத்திர மாற்றம்: செப்டம்பர் 11 முதல் இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! | Venus Transit In Swati Nakshatra Who Get Huge Luck

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

ஒவ்வொரு செயலிலும் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். தொழில் ரீதியான பயணங்கள் நல்ல லாபத்தைத் தரும். வெளிநாட்டில் வேலை செய்யும் கனவு நனவாக வாய்ப்பு கிடைக்கும்.சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.