செவ்வாய், சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் கேந்திர யோகத்தினால் தொழிலில் முன்னேற்றம், அதிர்ஷ்டத்தை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசிகளை மாற்றவும், பிற கிரகங்களுடன் இணைந்து பல்வேறு யோகங்களை உருவாக்குவதும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில், ஜுலை 29ம் தேதியில் செவ்வாய், சுக்கிரன் கிரகங்கள் 90 டிகிரி கோணத்தில் சந்திக்கும் போது கேந்திர யோகம் உருவாகின்றது. இந்த யோகத்தினால் தொழில், முன்னேற்றம், வருமான உயர்வு, வாழ்வில் சாதகமான திருப்பங்களை ஏற்படுத்தும்.
அந்த வகையில் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசியினரை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியினர் இந்த யோகத்தினால் பல வழிகளில் நன்மையை பெறுவார்கள். நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையுமாம்.
உங்களது நீண்ட நாள் கனவு மற்றும் லட்சியம் நனவாகுவதுடன், எதிர்பாராத நிதி வரவு, பண ஆதாயம் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைப்பதுடன், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்
சிம்ம் ராசியினருக்கு இந்த காலம் பொன்னான காலமாக அமைவதுடன், தொழில் மற்றும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்குமாம்.
போட்டித் தேர்வுகளில் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலனையும் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் எதிர்பாரா நல்ல செய்தியும் தேடி வரும்.

துலாம்
துலாம் ராசியினருக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் அனைத்தும் சுமூகமாக முடிவதுடன், திடீர் பண வரவினால் பொருளாதார நிலை வலுவடையும்.
நீண்ட நாட்களாக முடங்கியிருந்த வேலைகள் வெற்றியாக முடிவதுடன், பெற்றோரின் ஆதரவுடன் எடுக்கும் முக்கிய முடிவுகள் மகிழ்ச்சியை தரும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பினால் வேலையை எளிதாக முடிப்பீர்கள்.

தனுசு
தனுசு ராசியினருக்கு மன அழுத்தங்கள் நீங்கி புதிய வழிகள் பிறப்பதுடன், பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பாராட்டு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.
புதிய வீடு, மனை அல்லது வாகனம் வாங்கும் யோகம் வருவதுடன், தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். பழைய குடும்ப பிர்சசனைகள் முடிவிற்கு வருமாம்.
நிதி நெருக்கடி விலகி திடீர் பணவரவு உண்டாவதுடன், கடின உழைப்பிற்கு தக்க பலன் கிடைக்குமாம்.

மகரம்
மகர ராசியினருக்கு தொழில் ரீதியாக வளர்ச்சி கிடைப்பதுடன், வியாபாரத்தில் லாபமும் கிடைக்கும். தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
முதலீடுகளில் நல்ல லாபமும், எதிர்பார்க்காத பலனும் கிடைக்கும். பணியிடங்களில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உணர்வதுடன், நீண்ட நாள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் காலமாக அமையும்.

