காரசாரமான செட்டிநாடு பாணியில் கோழி குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக வீட்டில் அசைவ உணவுகள் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் சற்று காரசாரமான வகையில் செய்யும் அசைவத்திற்கு அதிக மவுசு என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் செட்டிநாடு பாணியில் காரசாரமான கோழி குழம்பு ஊரே மணக்கும் வகையில் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.

காரசாரமான செட்டிநாடு கோழி குழம்பு... ஊரே மணக்கும் வகையில் செய்வது எப்படி? | Spicy Chettinad Chicken Kulambu In Tamil

தேவையான பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2 பழுத்த தக்காளி
2 மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப

அரைப்பதற்கு

துருவிய தேங்காய் - 1/2 மூடி
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன் 

காரசாரமான செட்டிநாடு கோழி குழம்பு... ஊரே மணக்கும் வகையில் செய்வது எப்படி? | Spicy Chettinad Chicken Kulambu In Tamil

தாளிப்பதற்கு

கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கருப்பு மிளகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

மிக்ஸி ஜாரில் அரைப்பதற்கு கொடுத்த பொருட்களை சேர்த்து நன்றாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அகலமான கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு சேர்க்கவும்.

பின்பு மிளகாய், மஞ்சள், கரம் மசாலா ஆகிய பொடிகளை சேர்த்து மசாலா வாசனை செல்லும் வரை வதக்கவும் இதனுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, அலசி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.

காரசாரமான செட்டிநாடு கோழி குழம்பு... ஊரே மணக்கும் வகையில் செய்வது எப்படி? | Spicy Chettinad Chicken Kulambu In Tamil

சிக்கன் சற்று வெந்ததும் இதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கலந்து மூடி வைத்து மீண்டும் மிதமான தீயில் வேக விடவும்.

மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு மற்றும் சீரகம், கருப்பு மிளகாய் சேர்த்து தாளித்து, கடைசியாக குழம்பில் சேர்க்கவும். இதனுடன் கொத்தமல்லி இலையினை தூவி இறக்கினால் காரசாரமான கோழி குழம்பு தயார்.