தமிழா தமிழா நிகழ்ச்சியில் என்றும் சுவாரஸ்யமான உறவு முறை பையன் மற்றும் முறைப்பெண் இந்த வாரம் விவாதம் நடைபெற்றுள்ளது.

தமிழா தமிழா 

தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. .

இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

Tamizha Tamizha: உங்க தங்கச்சிய இந்த மாதிரி பண்ணினால் ஏத்துப்பீங்களா? திடீரென கோபப்பட்ட நடுவர் | Tamizha Tamizha Talk Cousin Marriage

இந்நிலையில் இந்த வாரம் என்றும் சுவாரஸ்யமான உறவு முறை பையன் மற்றும் முறைப்பெண் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.

இதில் முறைப்பையன்கள், பல வருடங்கள் கழித்து முறைப்பெண்ணை பார்த்த தருணத்தினை கூறியுள்ளார். அதில் ஒரு இளைஞர் Smooth-ஆன சூறாவளி வந்தால் எப்படியிருக்கும்? என்று கேட்டு சிரிக்க வைத்துள்ளார்.

மற்றொரு முறைப்பையன் தான் வேறொரு பெண்ணை காதலித்து வந்தும், முறைப்பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

அதுவரை சிரித்துக் கொண்டிருந்த நடுவர் சட்டென கோபத்துடன் அந்த இளைஞருடன், நாளைக்கு உங்க தங்கச்சியை இந்த மாதிரி பண்ணினால் ஏத்துப்பீங்களா? என்று கொந்தளித்துள்ளார்.