ஜோதிடத்தில் ஒரே நாளில் நடைபெறும் சூரிய - சுக்கிர பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தினை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

சூரிய சுக்கிரன் பெயர்ச்சி

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் தங்களது நிலையினை மாற்றிக் கொள்கின்றது. அதிலும் அபூர்வமாக சில கிரகங்கள் ஒரே நாளில் தனது நிலையினை மாற்றுகின்றன.

இவ்வாறான மாற்றத்தின் போது 12 ராசிகளின் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படும். அதிலும் இந்த ஜுன் மாதத்தில் ஜோதிட ரீதியாக பல மாற்றங்கள் நடைபெறுகின்றது.

 

சூரியனும் சுக்கிரனும் அரிதாக ஒரே நாளில் தனது நிலையை மாற்றுகின்றது. அதாவது சூரியன் மிருகசீரிட நட்சத்திரத்திற்கும், சுக்கிரன் கடக ராசிக்கும் செல்லவுள்ளனர்.

இந்த நிகழ்வானது வரும் 8ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சுக்கிரன் கடக ராசியில் ஜுலை 4ம் தேதி வரை இருப்பார். இந்த அரிய கிரகங்களின் பெயர்ச்சியினால் 3 ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை கொட்டுமாம். அவை எந்தெந்த ராசி என்பதை தெரிந்து கொள்வோம்.

ஒரே நாளில் சூரிய சுக்கிர பெயர்ச்சி... எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்? | Lucky Zodiac Sign Due To Sun Venus Transit

கடகம்

கடக ராசியினர் இந்த சூரிய சுக்கிர பெயர்ச்சியினால் பணியிடத்தில் தங்களது செயல்திறனால் மற்றவர்களை ஈர்ப்பதுடன், சமூகத்தில் மற்றும் பணி செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

பதவி மற்றும் புதிய பொறுப்புகள் வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும். படைப்பாற்றல் சிறப்பாக இருப்பதுடன், தொழிலிலும் மிகப்பெரிய அளவில் லாபத்தினை பெறுவீர்கள். பண வரவு அதிகரிப்பதுடன், சுக்கிரனின் அருளால் நல்ல ஆடம்பர வாழ்க்கையினை வாழ்வீர்கள்.

ஒரே நாளில் சூரிய சுக்கிர பெயர்ச்சி... எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்? | Lucky Zodiac Sign Due To Sun Venus Transit

 

சிம்மம்

சூரிய சுக்கிர பெயர்ச்சியினால் சிம்ம ராசியினருக்கு புதிய வருமான வழிகள் திறக்கப்படுவதுடன், நீண்ட காலம் வராமல் இருந்த பணம் வந்து சேரும்.

முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைப்பதுடன், ஆடம்பர பொருட்களுக்கு அதிகமான செலவும் செய்வீர்கள், ஆனாலும் நிதி நிலை நன்றாகவே இருக்குமாம்.

நேர்மறை எண்ணம் அதிகரிப்பதுடன், வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிப்பதுடன், வெற்றியையும், லாபத்தையும் காண்பீர்கள்.

ஒரே நாளில் சூரிய சுக்கிர பெயர்ச்சி... எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்? | Lucky Zodiac Sign Due To Sun Venus Transit

கன்னி

கன்னி ராசியினரின் நிதி நிலைமை வலுவடைவதுடன், நீண்ட காலமாக போடப்பட்ட திட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதுடன், நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

வேலை மற்றும் தொழில் இரண்டிலும் லாபத்தினையும், முன்னேற்றத்தினையும் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகள் முழு ஆதரவும் கிடைப்பதுடன், செல்வாக்குமிக்க நபர்களின் நட்பு கிடைத்து, அதனால் நல்ல ஆதாயத்தைப் பெறக்கூடும்.

ஒரே நாளில் சூரிய சுக்கிர பெயர்ச்சி... எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்? | Lucky Zodiac Sign Due To Sun Venus Transit