கோடை வெயிலால் முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு சில வீட்டு ஃபேஸ் பேக் என்னென்ன பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உடல் சோர்வதாகவும், முகம் மற்றும் தோல் பொலிவிழந்தும் காணப்படும்.

முகத்தில் வழியும் எண்ணெய் பசையை போக்கவும், முகப்பொலிவை அதிகரிக்கவும் கடைகளில் விற்கப்படும் அழகு பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இவற்றில் கலந்துள்ள ரசாயணம் முகத்திற்கு கெடுதல் ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் சருமம் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைப்பதற்கு என்னென்ன ஃபேஸ் பேக் என்பதை தெரிந்து கொள்வோம்.

கோடை வெயிலிலும் முகம் பிரகாசமாக இருக்கணுமா? இதை மட்டும் போடுங்க | Face Pack To Make Your Face Glow In Summer

 

இயற்கையான ஃபேஸ் பேக் என்ன?

இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் பால் அல்லது ரோஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின்பு குளிர்ந்த தண்ணீரால் கழுவினால் அதிகப்படியான எண்ணெய் பசை, கருமை இவற்றினை நீக்கி பிரகாசமாக வைக்கும்.

கோடை வெயிலிலும் முகம் பிரகாசமாக இருக்கணுமா? இதை மட்டும் போடுங்க | Face Pack To Make Your Face Glow In Summer

1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை 15 அல்லது 20 நிமிடம் ஊற வைத்து பின்பு குளிர்ந்த தண்ணீரால் முகத்தினை கழுவினால் முகம் புத்துணர்ச்சியுடனும், குளிர்ச்சியுடனும் இருக்கும்.

நன்றாக பழுத்த தக்காளியை இரண்டாக வெட்டி அதில் ஒரு ஸ்பூன் சர்க்கரையை போட்டு முகத்தில் மென்மையான முறையில் ஸ்க்ரப் செய்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த தண்ணீரால் முகத்தினை கழுவவும்.

கோடை வெயிலிலும் முகம் பிரகாசமாக இருக்கணுமா? இதை மட்டும் போடுங்க | Face Pack To Make Your Face Glow In Summer

பௌல் ஒன்றில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு அதில் எலுமிச்சை சில துளிகள் விட்டு நன்றாக கலந்து கொள்ளவும். இதனை 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பளிச்சென்று மாறும்.

பாதி வெள்ளரிக்காய் மற்றும் ஒரு கைப்பிடி புதினாவை எடுத்து நன்றாக பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும். இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தினை கழுவினால் முகம் குளிர்ச்சியாகவும், பொலிவாகவும் இருக்கும்.

கோடை வெயிலிலும் முகம் பிரகாசமாக இருக்கணுமா? இதை மட்டும் போடுங்க | Face Pack To Make Your Face Glow In Summer