குடல் ஆரோக்கியத்தினை பாதுகாப்பாபதற்கு நபம் செய்ய வேண்டிய செயல்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

செரிமானத்தில் ஆரோக்கியம்

குடலில் நல்ல பாக்டீரியாக்கள் சமநிலையில் இருந்தால் மட்டுமே நமது செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படுகின்றது.

குடலில் நுண்ணுயிர்த் தொகுதி என்று அழைக்கப்படும் மில்லியன் கணக்கான நுண்ணிய நுண்ணியிரிகளின் இருப்பிடமாக இருந்து வருகின்றனர். 

இதில் நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்கள் இரண்டு உள்ளது. நல்ல பாக்டீரியாக்கள் சமநிலையில் இருக்கும் போது செரிமான பிரச்சனை வராமல் இருக்கின்றது. 

குறிப்பாக மூளை சிறப்பாக செயல்படுவதை நாம் உணர முடிகின்றது. அதுவே குடல் ஆரோக்கியத்தில் தீங்கு ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் வயிறுவலி பிரச்சனையிலிருந்து இதயநோய் மற்றும் மன அழுத்தம் இவற்றிற்கு கொண்டு செல்கின்றது.

வயிற்றினை ஆரோக்கியமாக வைப்பதற்கு பலரும் சிரமப்பட்டுவரும் நிலையில், ஆரோக்கிய செரிமான அமைப்பினை சில சில மாற்றங்களால் நாம் எவ்வாறு மாற்றலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

குடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்கின்றதா? இதை கட்டாயம் செய்திடுங்க | Do This Habits To Keep Your Intestine Healthy

வயிறு ஆரோக்கியத்தை மேம்படுத்த என்ன செய்யலாம்?

நமது உணவில் நார்ச்சத்து அளவினை படிப்படியாக அதிகரிக்க வேண்டும். இவை செரிமானத்திற்கு மட்டுமின்றி, நல்ல பாக்டீரியாக்களுக்கும் உணவளிக்கும். ஆதலால் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், முழு தானியங்கள் எடுத்துக் கொள்ளலாம். நார்ச்சத்து உணவை சாப்பிடவில்லையெனில் வாயுதொல்லை மற்றும் தசைபிடிப்பு பிரச்சனை ஏற்படும்.

உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது தினமும் 8 அல்லது 10 டம்ளர் தண்ணீர் பருகுவது அவசியமாகும். மேலும் தண்ணீர் சத்து நிறைந்த காய்களை சாப்பிட வேண்டும்.

குடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்கின்றதா? இதை கட்டாயம் செய்திடுங்க | Do This Habits To Keep Your Intestine Healthy

சமச்சீரான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட திண்பண்டம், துரித உணவுகள் இவற்றினை தவிர்க்கவும். இவை குடல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றது.

மூளைக்கும் வயிறுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளது. ஆதலால் மன அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் செரிமானம் மெதுவாகி பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது . ஆதலால் மனதை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைக்கவும். சரியான நேரத்தில் தூங்கி எழும்பவும்.

குடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்கின்றதா? இதை கட்டாயம் செய்திடுங்க | Do This Habits To Keep Your Intestine Healthy

தொடர்ந்து வயிறு உப்புசம், வாயு, வயிறு வலி போன்ற பிரச்சனைகள் அடிக்கடி காணப்பட்டால் உடனே தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும்.