பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்துவமான குணம் இருப்பது இயல்பான விடயம் தான். ஆனால் ஒருவருடைய நேர்மறை எதிர்மறை குணங்களுக்கும் அவர்களின் பிறப்பு ராசிக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பிலேயே அதிக உணர்திறன் கொண்டவர்களாகலும் சிறிய விடயத்துக்கும் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.

அப்படி சூழ்நிலைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் எளிதில் ஆட்படும் ராசியினர் யார் யார் எனவும் அவர்களின் முக்கிய குணங்கள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

எளிதில் உணர்ச்சிவசப்படும் டாப் 3 ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Very Emotional Persons

மேஷம் ராசிச் சக்கரத்தின் முதல் நெருப்பு ராசியாக அறியப்படுகின்றது. இந்த ராசியினர் அதீத மனவலிமை கொண்டவர்களாக இருக்கும் அதே சமயம் ஆத்திரத்தில் உணச்சிகளுக்கு அடிமையாகிவிடும்  தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் தன்னம்பிக்கையும், அபரிமிதமான மன வலிமையும் கொண்டவர்கள்; அரிதாகவே பலவீனமாகத் தோன்றுவார்கள். மற்றவர்களைப் போலவே, அவர்களும் சில சமயங்களில் விரக்தியடையலாம் அல்லது முன்கோபியாக மாறலாம்.

ஆனால் இவர்கள் எந்தளவுக்கு மனதளலில் உறுதியாக இருக்கின்றார்களோ, அதே அளவுக்கு நெருக்கமானவர்களின் விடயத்தில் எளிதில் உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்பகள்.

துலாம்

எளிதில் உணர்ச்சிவசப்படும் டாப் 3 ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Very Emotional Persons

துலாம் ராசி நீதியின் தராசால் குறிக்கப்படுகிறது, இது உணர்ச்சிகள் விஷயத்தில் அவர்களின் சற்றே பற்றற்ற அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது.

தராது எப்படி சமனான எடை அல்லாத போது நிலையில்லாமல் இருக்குமே இவர்களும் அப்படியே சூழ்நிலைகள் சீராக இல்லாத போது எளிதில் உணர்ச்சிவசப்பட்டு வினை புரியும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்களிடம் உணர்ச்சிகள் இல்லை என்பதல்ல; மாறாக, அவர்கள் தங்கள் எண்ணங்களை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதில் கவனமாக இருக்கிறார்கள். இருபினும் சில சமயம் தங்களால் கட்டுப்படுத்த முடியாத உணர்வுகளுடன் போராடிக்கொண்டே இருப்பார்கள்.

தனுசு

எளிதில் உணர்ச்சிவசப்படும் டாப் 3 ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Very Emotional Persons

தனுசு ராசிக்காரர்கள் "வாழு, வாழ விடு" என்ற தத்துவத்தைக் கடைப்பிடிப்பார்கள்.அவர்கள் அடிப்படையில் மிகவும் நல்லவர்களாகவும், அமைதியான குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

ஆனால் இவர்களின்  சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் ஏதாவது நடந்தால் அவர்களின் கோர முகத்தை வெளிப்படுத்துவார்கள். 

இவர்கள் பொதுவாக கடந்த காலத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. அவர்கள் எவ்வளவு விரைவாக அதிலிருந்து மீண்டு வருகிறார்கள் என்பதைப் பார்த்து மற்றவர்கள் நிச்சயம் வியந்து போவார்கள்.