விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" படத்தில் ஆசிட் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்து பலரின் கவனத்தை பெற்றார் ரேபா மோனிகா ஜான்.

2016-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நிவினி பாலியின் "ஜேகப்பின்டே ஸ்வர்கராஜ்ஜியம்" படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ரேபா மோனிகா, 2018'இல் தமிழில் ஜெய்யுடன் "ஜருகண்டி" என்ற படத்தில் அறிமுகமாகினார்.

தமிழில் உடனே பிகில் படம் அமைய ரசிகர்களுக்கு நல்ல பரிட்சயமாகினார். அதனை தொடர்ந்து தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நாயகியாக அறிமுகமானவர், இடையில் ஆகாஷ் வாணி என்ற வெப் தொடரிலும் நடித்தார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜோசப் என்பவரையும் திருமணம் செய்து கொண்டார் ரேபா மோனிகா. திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வரும் ரேபா மோனிகா, கணவர் குறித்து சில கருத்துக்களை தெலுங்கு பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை குறித்து கணவர் என கூறுவார் என நெறியாளர் கேள்வி எழுப்ப, அதற்கு அது குறித்தெல்லாம் அவருக்கு சற்று ஜெல்சி மட்டுமே இருக்கும் என கூறி, மற்றபடி அவர் படங்கள் குறித்து எந்தவித திணிப்பும் தந்து தருவதில்லை என கூறினார் ரேபா மோனிகா.