பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்கும் இனம் புரியாக பயம் இருக்கும். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று பழமொழி கூட இருக்கின்றது.

பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. அனைவரும் பயப்படுவதற்கு காரணம் அதன் விஷம் தான். பாம்புகளுக்கு பற்களில் விஷம் இருப்பதற்கு காரணம் தனது இறையை வேட்டையாடுவதற்காகவே.

வீட்டிற்குள் பாம்பு புகுந்தால் எப்படி எளிமையா விரட்டலாம்னு தெரியுமா? இதை செய்தால் போதும் | What Smell Keeps Snakes Away

ஆனால் பாம்புகள் மனிதர்களை கடிப்பது வேட்டையாடுவதற்காகவோ அல்லது கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்ல.மாறாக மனிதர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தினால் தான்.

மிகவும் ஆபத்தான உயிரினமான பாம்புகளுக்கு புதர்செடிகள் மிகவும் பிடித்தமானவை. வீட்டுத் தோட்டங்களில் பாம்புகள் எளிதாக குடிபுகுந்து விடுகின்றன.

வீட்டிற்குள் பாம்பு புகுந்தால் எப்படி எளிமையா விரட்டலாம்னு தெரியுமா? இதை செய்தால் போதும் | What Smell Keeps Snakes Away

இதனால் அவை வீட்டினுள் துழைவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது. அப்படி சில சமயம் எதிர்பாராத விதமாக பாம்புகள் வீட்டினுள் புகுந்துவிட்டால் பயப்பட தேவையில்லை. மிகவும் எளிமையாக முறையில் பாம்பை எப்படி வெளியேற்றுவது என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

பாம்புகளுக்கு மண்ணெண்ணெய் வாசனை தாங்க முடியாது என்பதால் அது வீட்டிற்குள் வராது என்று சொல்லப்படுகிறது. பாம்பு வீட்டுக்குள் புகுந்து விட்டால் வீட்டில் மண்ணெண்னை தெளிப்பதன் மூலம் பாம்பை வெளியேற்ற முடியும். 

வீட்டிற்குள் பாம்பு புகுந்தால் எப்படி எளிமையா விரட்டலாம்னு தெரியுமா? இதை செய்தால் போதும் | What Smell Keeps Snakes Away

இது குறித்து அஸ்-அனிமல் என்ற விலங்கு இணையதளம் பாம்புகளுக்கு பிடிக்காத 14 வாசனைகளை தெரிவித்துள்ளது. இவற்றில் பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவை முக்கிய இடம் வகிக்கின்றது. 

மேலும், புதினா, கிராம்பு, துளசி, இலவங்கப்பட்டை, வினிகர், எலுமிச்சை ஆகியவைகளில் அம்மோனியா வாயு அதிகம் இருப்பதால் அதைனை பாம்புகளால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை பாம்பு வீட்டுக்குள் புகுந்து விட்டால் இந்த பொருட்களை எரிப்பதன் மூலம் பாம்பை வெளியேற்றலாம்.

வீட்டிற்குள் பாம்பு புகுந்தால் எப்படி எளிமையா விரட்டலாம்னு தெரியுமா? இதை செய்தால் போதும் | What Smell Keeps Snakes Away

பாம்புகளுக்கு புகையும் எதிரிதான். அதனால் புகையாலும் பாம்புகளை விரட்ட முடியும். இந்த பொருட்கள் அதிகம் உங்கள் வீட்டில் இருந்தால் பாம்புகள் வருவதை தடுக்க முடிவதுடன் பாம்பு வீட்டில் புகுந்து விட்டாலும் எளிமையாக வெளியேற்ற முடியும்.